ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் ஆடும் லெவன் இதோ - வாசீம் ஜாஃபர் கணிப்பு!

Published : Feb 07, 2023, 05:37 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆடும் லெவனில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் கணித்துள்ளார்.

PREV
114
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் ஆடும் லெவன் இதோ - வாசீம் ஜாஃபர் கணிப்பு!
ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

214
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிக்குரிய உடை அணிந்து ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுத்தால் இந்தப் போட்டியில் அறிமுகமாகும் சூர்யகுமார் யாதவ் 63 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து கொண்டார்.

314
டெஸ்ட்

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்தியா ஆடும் லெவனில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்று 11 பேர் கொண்ட அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் பட்டியலிட்டுள்ளார்.

414
ரோகித் சர்மா:

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடியிருந்தார். இது தான் அவரது கடைசி டெஸ்ட் போட்டி. அதன் பிறகு அவர் எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவரது தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

514
கேஎல் ராகுல்:

கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி விளையாடி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

614
புஜாரா:

இவரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். நல்ல பார்மில் இருக்கும் புஜாரா கண்டிப்பாக அணியில் இடம் பெறுவது நல்லது தான். முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 102 (நாட் அவுட்) ரன்களும் அடித்தார். ஆனால், 2ஆவது டெஸ்டில் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை.

714
விராட் கோலி:

கடந்த ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடாவிட்டாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அதிக ரன்களும், சதங்களும் அடித்துள்ளார். இதனால், அவர் 11 பேர் கொண்ட வாசீம் ஜாஃபர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

814
சுப்மன் கில்:

வங்கதேசத்திற்கு எதிரான தொடர், இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் என்று வரிசையாக சுப்மன் கில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இவ்வளவு ஏன், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இளம் வயதில் இரட்டை சதமும் அடித்துள்ளார்.

914
ரிஷப் பண்ட்: கேஎஸ் பரத் - விக்கெட் கீப்பர்

ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால், அவருக்குப் பதிலாக கேஎஸ் பரத் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில போட்டிகளில் இஷான் கிஷால் சரியான ஃபார்மில் இல்லாததால், கேஎஸ் பரத் அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

1014
ரவீந்திர ஜடேஜா:

காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக சிறப்பாக விளையாடி வருகிறார். பௌலிங் மற்றும் பேட்டிங்கில் இவர் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த 5 மாதங்களாக ஓய்வில் இருந்த ஜடேஜா தற்போது அணிக்கு திரும்பியிருக்கிறார்.

1114
ரவிச்சந்திரன் அஸ்வின்:

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பங்கு மிகவும் முக்கியமானது.
 

1214
குல்தீப் யாதவ்:

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது வாசீம் ஜாஃபரின் 11 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளார்.

1314
முகமது ஷமி:

கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி கடைசியாக விளையாடியிருந்தார். அதன் பிறகு அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. மாறாக, ஒரு நாள் தொடர்களில் மட்டும் பங்கேற்று வந்தார். சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1414
முகமது சிராஜ்:

கடந்த ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். 2ஆவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் கைப்பற்றாத நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories