ராகுல் டிராவிட்டின் புது பிளான்: இந்த 4 பேருக்கு மட்டும் ஸ்வீப் ஷாட் டிரைனிங்!

First Published Feb 7, 2023, 1:39 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 

ஆஸ்திரேலியா 4 டெஸ்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 
 

சூர்யகுமார் யாதவ் 63

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிக்குரிய உடை அணிந்து ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுத்தால் இந்தப் போட்டியில் அறிமுகமாகும் சூர்யகுமார் யாதவ் 63 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து கொண்டார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபி இது என்பதால், இதில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தீவிரம் காட்டி வருகிறது.
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

ஆனால், இந்தியாவோ இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா இந்த தொடரை 2 - 0 அல்லது 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள்

ஆனால், கண்டிப்பாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று தெரிகிறது. இதற்காகவே பயிற்சி போட்டியை தவிர்த்துவிட்டு, தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் மைதானத்தை அமைத்து அதிலும் பயிற்சியும் செய்திருக்கின்றனர்.
 

ராகுல் டிராவிட்

இந்த நிலையில், தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து அறிவுரை வழங்கியிருக்கிறார். அது என்ன என்பது குறித்து தகவல் வந்துள்ளது.
 

ரோகித் சர்மா

அதாவது, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோரை தனியாக அழைத்து, சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுப்பாட்டம் ஆடக் கூடாது. மாறாக, அதிரடியான ஆட்டத்தை தான் அவர்களிடத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஸ்வீப் ஷாட்

அதுமட்டுமின்றி அவர்களுக்கு என்று தனியாக ஸ்வீப் ஷாட் அடிக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும், இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் மூலமாக மட்டுமே அதிக ரன்கள் குவிக்க முடியும்.
 

விராட் கோலி

அதுவும் தரையோடு தரையாக தான் அடித்து ரன் அடிக்க வேண்டும். இதற்கு பெயர் போனவர் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட். தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் பெரும்பாலும் இது போன்ற ஷாட்டுகளை அடித்து ஆடக்கூடியவர்கள் என்பதால், இவர்களும் இந்த 4 பேர் கொண்ட பட்டியலில் இணைந்துள்ளனர்.
 

ஸ்வீப் ஷாட்

இந்த 4 பேரில் ரோகித் சர்மா, சுப்மன் கில், கே.எல். ராகுல் ஆகியோர் அடித்து ஆடக் கூடியவர்கள். ஸ்ட்ரைக்கை மாற்றி ஆடும் கோலிக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழும் போது, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சற்று தடுமாறி வரும் கோலி இப்படி ஸ்வீப் ஷாட் அடிக்க ஆட கற்றுக் கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!