சேப்பாக்கம் மைதானத்தில் புது வசதி: 2 ஸ்டேண்டுகள் அமைக்கும் பணி தீவிரம்!

First Published Feb 7, 2023, 11:05 AM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

ஆஸ்திரேலியா டெஸ்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. 3 ஒரு நாள் போட்டிகளில் ஒன்று மட்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. 

சர்வதேச போட்டி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டி நடந்தது. இவ்வளவு ஏன், இந்தியா டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்த மைதானத்தில் தான். இந்த மைதானத்தில் தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி நடக்கிறது.

சேப்பாக்கம் மைதானம்

இந்த நிலையில், இந்த போட்டி தொடங்குவதற்குள்ளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக 2 ஸ்டேண்டுகள் திறக்கப்படவுள்ளன. ரூ.135 கோடியில் புதிய ஸ்டேண்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதோடு மைதானத்தையும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் கிரவுண்ட் எது என்றால் அது சேப்பாக்கம் மைதானம் தான். இந்த மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடிய பிறகு தான் ஓய்வு பெறுவேன் என்று கூட தோனி கூறியிருக்கிறார். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டி நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து இந்த மைதனத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!