IND vs AUS: கோலி - கில் இருவரில் யார் ரோஹித்துடன் ஓபனிங்கில் இறங்கவேண்டும்..? கட் & ரைட்டா பேசிய ஹர்பஜன்

First Published | Feb 6, 2023, 3:05 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் - கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான தொடர். இந்திய அணி இந்த தொடரை 2-0 அல்லது 2-1 அல்லது 3-0 அல்லது 3-1 என ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை வலுவாக பிடித்து ஃபைனலுக்கு முன்னேறமுடியும்.

என் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவர்தான்..! ஜோஸ் பட்லர் ஓபன் டாக்
 

Tap to resize

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் இந்நேரம் முடிவு செய்யப்பட்டிருக்கும். ரோஹித்துடன் ஷுப்மன் கில் - கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. கேஎல் ராகுல் டெஸ்ட் அணியி ரெகுலர் ஓபனர். 

ஆனால் ஷுப்மன் கில் டாப் ஃபார்மில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும், டி20யில் சதமும் அடித்து சாதனை படைத்தார். 

இந்நிலையில், தற்போதைய சூழலில் டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 

IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன்..!
 

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், தொடக்க ஜோடி தான் மிக முக்கியம். ஒரு தொடரின் போக்கை தீர்மானிப்பதே தொடக்க வீரர்கள் தான். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும். ஷுப்மன் கில் வேற லெவல் ஃபார்மில் உள்ளார். கேஎல் ராகுலும் டாப் பிளேயர் தான். ஆனால் கில் இப்போதிருக்கும் ஃபார்மிற்கு அவர் தான் தொடக்க வீரராக ஆடவேண்டும். அண்மைக்காலத்தில் நிறைய ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால் ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் தான் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
 

Latest Videos

click me!