Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்!

First Published Feb 5, 2023, 6:09 PM IST

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்களில் சச்சின், தோனி, டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

பார்டர் கவாஸ்கர் டிராபி

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
 

சச்சின் டெண்டுல்கர்:

கடந்த 2002- 2003 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அந்த டெஸ்ட் தொடரில் சச்சின் தொடர்ந்து சொதப்பி வந்தார். ஆனால், சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் 241 ரன்கள் விளாசினார்.
 

விவிஎஸ் லட்சுமணன்:

டெஸ்ட் போட்டிகள் என்றாலே நீண்ட நேரம் களத்தில் நின்று ஆட வேண்டும். அதில் வித்தை தெரிந்தவர் மட்டை ஆட்டக்காரர் விவிஎஸ் லட்சுமணன். தனி ஒருவராக நின்று இந்தியாவுக்கு எத்தனையோ டெஸ்ட் போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அப்படி ஒரு போட்டியில் விவிஎஸ் லட்சுமணன் 2ஆவது இன்னிங்ஸில் 281 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக அமைந்துள்ளது.

ராகுல் டிராவிட்:

கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அடிலெய்டில் நடந்த போட்டியில் ராகுல் டிராவிட் 233 ரன்கள் குவித்தார். டிராவிட்டின் சிறப்பான டெஸ்ட் போட்டிகளில் இந்த போட்டியும் ஒன்றாகும். 

எம் எஸ் தோனி:

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது, நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதில், தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 224 ரன்கள் குவித்தார். இன்று வரை கேப்டன் தனி ஒருவராக இருந்து அதிக ஸ்கோர் அடித்த பெருமை தோனிக்கு மட்டுமே உண்டு.

சச்சின்:

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. பெங்களூருவில் நடந்த டெஸ்டில் சச்சின் 214 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. 
 

click me!