சமகாலத்தின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். விராட் கோலி, வில்லியம்சன், ரூட், ஸ்மித் ஆகியோர் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். ரோஹித் சர்மா, ஜோஸ் பட்லர் ஆகியோரும் அவர்களுக்கு நிகரான சிறந்த வீரர்கள். ரோஹித், பட்லர் மாதிரியான வீரர்கள் சமகாலத்தின் மிகச்சிறந்த அதிரடி வீரர்கள்.
2019ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் முக்கிய பங்காற்றியவர் ஜோஸ் பட்லர். 2022ல் டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் கேப்டன்சியில் தான் வென்றது.
ஐபிஎல்லிலும் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக அபாரமாக பேட்டிங் ஆடி அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகிறார் பட்லர். ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். ஐபிஎல்லில் 82 போட்டிகளில்ஆடி 2831 ரன்கள் அடித்துள்ளார்.
ஜஸ்ப்ரித் பும்ரா டி20 கிரிக்கெட்டில் பட்லரை 4 முறை வீழ்த்தியுள்ளார். பும்ராவின் பவுலிங்கை பட்லர் 86.76 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் பட்லருக்கு பும்ரா வெறும் 6 பந்துகள் மட்டுமே வீசியிருக்கிறார். அதில் பட்லர் 2 ரன் அடித்துள்ளார்.