கனவை தூள் தூளாக்கிவிட்டு கிரிக்கெட் விளையாடும் அக்‌ஷர் படேல்!

First Published Feb 4, 2023, 7:25 PM IST

மெக்கானிக்கல் இன்ஜினியராக வேண்டும் என்று சிறு வயது முதலே நினைத்துக் கொண்டிருந்த அக்‌ஷர் படேல், அவரது நண்பர் மூலமாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளார்.

அக்‌ஷர் ராஜேஷ்பாய் படேல்

கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் ராஜேஷ்பாய் படேல். இவரது மூத்த சகோதரர் சன்ஷிப் படேல். குழந்தை பருவம் முதலே விளையாட்டின் மீத் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், 15 வயது வரை அவர் கிரிக்கெட் விளையாடவில்லை.
 

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட அக்‌ஷர் படேல்: வைரலாகும் புகைப்படங்கள்!

தீரன் கன்சாரா

கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியதில்லை. 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளிகளுக்கு இடையிலாக நடந்த கிரிக்கெட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் ஒருவர் வரவில்லை. ஆகையால், நண்பரான தீரன் கன்சாரா, அவரை விளையாட வரும்படி வற்புறுத்தியுள்ளார். இதுவே அவரை கிரிக்கெட் விளையாட தூண்டியது.

மேடையில் குத்தாட்டம் போட்ட அக்‌ஷர் படேல் - மேகா: சோஷியல் மீடியாவையே அதிர வைக்கும் வீடியோஸ்!

அக்ஷர்

அக்‌ஷரின் பிறந்த பெயர் அக்சர். ஆனால், பள்ளி சான்றிதழில் அக்ஷர் என்று எழுதியது பள்ளி முதல்வரின் தவறு. அதன் பிறகு பாஸ்போர்ட் முதல் எல்லா ஆவணங்களிலும் பள்ளி சான்றிதழில் உள்ளபடியே மாற்றியுள்ளார்.
 

எனது தோழியை மணந்தது மாயாஜாலமான நாள்: அக்‌ஷர் படேல் டுவீட்!

மெக்கானிக்கல் இன்ஜினியர்

ஆரம்பம் முதலே ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக வர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர். நண்பரின் உதவியால் கிரிக்கெட் பற்றி தெரிந்து கொண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக அவரது தந்தையும் இருந்துள்ளார்.

திருமணம் நிச்சயமாயிருச்சு, தேதி தான் குறிக்கல: அக்‌ஷர் படேல் - மேகா திருமணம் எப்போது?

தொழில் முறை கிரிக்கெட்

ஒருபோதும் தொழில் முறை கிரிக்கெட்டை அக்‌ஷர் விளையாடியதில்லை. தொடர்ந்து வலை பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு வந்து, தெரு கிரிக்கெட் மட்டும் விளையாடி வந்துள்ளார். அப்போது, அவரது தந்தை தொழில்முறை கிரிக்கெட்டில் அனைத்து வசதிகள் இருந்தும் ஏன், தெரு கிரிக்கெட் விளையாடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதன் பிறகு தான் கிரிக்கெட்டின் மகத்தும் உணர்ந்து தீவிரமாக விளையாட முயற்சி செய்துள்ளார்.

அக்‌ஷர் படேலின் பாட்டி

அக்‌ஷர் படேலின் பாட்டி, தனது பேரன் இந்திய அணியில் சேர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அக்‌ஷர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போதே அவரது பாட்டி இறந்துள்ளார். அவரது இறுதி சடங்கில் கூட அக்‌ஷர் படேலால் கலந்து கொள்ள முடியாத வகையில் சுற்றுப்பயண போட்டி கிரிக்கெட்டில் தீவிரமாக விளையாடி வந்தார்.
 

குஜராத்தின் அண்டர் 19 மாநில அணி

குஜராத்தின் அண்டர் 19 மாநில அணிக்காக விளையாட அக்‌ஷர் படேலை அழைத்துச் சென்ற போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சீசனில் அனைத்து போட்டிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

யுவராஜ் சிங் ரோல் மாடல்

யுவராஜ் சிங்கை தனது ரோல் மாடலாக கொண்டுள்ளார். அக்‌ஷர் படேல் கிரிக்கெட் விளையாடியதற்கு மற்றொரு காரணம், அவரால் ஜிம்மில் திறமையாக இருக்க முடியாதது தான். உடல் ரீதியாக பலவீனமாக அக்‌ஷர் படேல் காணப்பட்டார். இது அவரது பெற்றோரை கவலையடையச் செய்தது. 

அக்‌ஷர் படேல்

இதன் காரணமாக கிரிக்கெட் விளையாடி தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டர். உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபி, துலிப் டிராபி மற்றும் தியோதர் டிராபி போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

அக்‌ஷர் படேல்

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 தொடரில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 

அக்‌ஷர் படேல் காதல் திருமணம்

இதுதவிர, ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்‌ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

அக்‌ஷர் படேல் பிறந்தநாள்

இதையடுத்து கடந்த ஆண்டு அக்‌ஷர் படேலின் 29ஆவது பிறந்தநாளன்று இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அக்‌ஷர் படேலின் 29ஆவது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேகாவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

அக்‌ஷர் படேல் திருமணம்

கடந்த 26 ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் அக்‌ஷர் படேல் மற்றும் மேகாவிற்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

2 டெஸ்ட் போட்டிகள்

முகமது கைஃப் உள்பட ஒரு சில கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருமண வரவேற்பு எப்போது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணியில் அக்‌ஷர் படேல் இடம் பெற்றுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!