ஆஸ்திரேலியாவை வெல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்? அருமையான் ஐடியா கொடுத்த ரவி சாஸ்திரி!

First Published Feb 7, 2023, 3:16 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசனை கொடுத்துள்ளார்.
 

ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 
 

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிக்குரிய உடை அணிந்து ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுத்தால் இந்தப் போட்டியில் அறிமுகமாகும் சூர்யகுமார் யாதவ் 63 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து கொண்டார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபி இது என்பதால், இதில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தீவிரம் காட்டி வருகிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபி

ஆனால், இந்தியாவோ இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா இந்த தொடரை 2 - 0 அல்லது 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில், இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் என்றாலே சொல்லவே வேணாம். அதுவும் பந்து நன்றாக ஸ்பின்னானால் அஸ்வின் தான் டாப்பாக இருப்பார். பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு சாதகமாக இருப்பார்.

குல்தீப் யாதவ்:

இந்தியாவிற்கு 3 சுழற்பந்து வேண்டுமென்றால், குல்தீப் யாதவ் தான் ஆட வேண்டும். அக்‌ஷர் மற்றும் ஜடேஜா இருவருமே ஒன்றாக ஆடக் கூடியவர்கள். இவர்கள் மாதிரி குல்தீப் யாதவ் கிடையாது. வரும் 9ஆம் தேதி நடக்கும் போட்டியில் டாஸில் இந்தியா தோற்றால் முதலில் இந்தியா ஸ்பின் பௌலிங் தான் தேர்வு செய்ய வேண்டும். அதுவும் குல்தீப் யாதவ் தான் பந்து வீச வேண்டும்.
 

குல்தீப் யாதவ்

மைதானம் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகம் இல்லையென்றாலும் கூட குல்தீப் யாதவ் தான் சிறப்பாக பந்து வீசுவார். மைதானத்திற்கு ஏற்ப சுப்மல் கில்லை தேர்வு செய்யலாம். ஆனால், சூர்யகுமார் யாதவ் அணியில் கட்டாயம் இருக்க வேண்டும்.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சட்டீஸ்வர் புஜாரா ஆகியோரது வரிசையில் 5ஆவதாக சூர்யகுமார் களமிறங்க வேண்டும். எப்போதும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஓவரை மெய்டனாக வீச விடக் கூடாது.

விராட் கோலி

விராட் கோலி நன்றாக ஆட வேண்டும். ஆரம்பம் முதலே அவர் நன்றாக ஆடினால் போதும். முதல் மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி மட்டும் நன்றாக ஆடினால் போதுமானது. ஆஸ்திரேலியாவின் யூகம் விராட் கோலியிடம் பலிக்காது.

இந்தியா

ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போது ரிஷப் பண்ட் தான் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் அணியில் இல்லாதது பெரும் இழப்பு. மைதானத்தின் ஸ்பின் இருந்தால் அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் இருக்க வேண்டும். அது யாராக கூட இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவை மிரட்டக் கூடியவராக இருக்க வேண்டும்.

click me!