மைதானம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாக்பூரில் மழை வருமா?

Published : Feb 08, 2023, 02:51 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது.  

PREV
17
மைதானம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாக்பூரில் மழை வருமா?
இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது.

தோற்றாலும் அரையிறுதிப் போட்டிக்கு சென்ற பார்ல் ராயல்ஸ் - மீண்டும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் மோதல்!

27
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள இந்தியா இந்த தொடரில் 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த தொடரில் இப்படி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.
 

சதம், சதமா அடிக்கணும், இந்தியா ஜெயிக்கணும்: கேஎல் ராகுல் வேண்டுதல்!

37
நாக்பூர் மைதானம்

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. நாக்பூர் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது எப்போது என்று தான் தெரியவில்லை.

புதிய காற்றை சுவாசிப்பது ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்: வீடு திரும்பிய ரிஷப் பண்ட்!
 

47
சுழற்பந்து

முதல் நாளில் முதல் ஓவரிலிருந்து இருக்குமா? அல்லது 2ஆவது நாளில் இருக்குமா என்பது தான் கேள்விக்குறி. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் இந்திய அணி சுழற்பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்னாள் வீரர்களின் கருத்து.

57
ராகுல் டிராவிட்

மைதானம் வறண்ட நிலையில் இருக்கும் நிலையில், முதல் நாளில் முதல் ஓவரிலேயே பந்து சுழன்று வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இதற்கு இந்திய தலைமை பயிற்சியாளர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மைதானத்தில் கொஞ்சம் புற்களை வளர வைக்க மைதானம் பராமரிப்பாளர்களிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
 

67
மைதானம் யாருக்கு சாதகம்

எனினும், மைதானம் எப்படி என்று இன்று மாலை தான் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாக்பூரைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிகிறது. எனினும், பனிப்பொழுவு காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக போட்டி தொடங்கிய ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.
 

77
மைதானம் ஈரப்பதம்

மைதானம் ஈரப்பதமாக இருந்தால் பந்து ஸ்விங் ஆகாது. இப்படிப்பட்ட சூழலில் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்காது. இதனால், போட்டியில் டாஸ் எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு போட்டியில் முதல் அரைமணிநேரமும் முக்கியம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories