புதிய சர்ச்சையில் ரவீந்திர ஜடேஜா: தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்த போட்டி நடுவர்!

Published : Feb 10, 2023, 11:17 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பந்தை சேதப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
17
புதிய சர்ச்சையில் ரவீந்திர ஜடேஜா: தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்த போட்டி நடுவர்!
4 டெஸ்ட் போட்டிகள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

27
Ravindra Jadeja

டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலியாவின் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

37
Image credit: PTI

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியா டாப் பேட்ஸ்மேன்களை தனது சுழலில் சுருட்டி எடுத்துள்ளார். 22 ஓவர்கள் வீசிய ஜடேஜா 8 மெய்டன் ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 
 

47
Image credit: PTI

இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விதிமீறல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பந்து வீசுவதற்கு முன்னதாக முகமது சிராஜை நோக்கி சென்றார். அப்போது சிராஜ் தனது கையை நீட்ட, அவரது கையிலிருந்து திரவம் போன்று எதையோ எடுத்த ஜடேஜா, அதனை தனது கை விரல்களில் பூசிக் கொண்டார்.
 

57
Ravindra Jadeja

அதாவது, அவர் பந்தை டேர்ன் செய்யும் விரர்களில் மட்டுமே அந்த திரவத்தை தடவிக் கொண்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, வீடியோவாகவும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலியா ஊடகங்களில் விதிமீறல் என்று செய்தி வெளியாகி வருகிறது. 

67
Image credit: PTI

உண்மையில் பந்து வழுக்கிக் கொண்டு செல்லாமல் கிரிப்பாக இருப்பதற்கு அந்த மருந்தை தனது கையில் பூசிக் கொண்டுள்ளார். அப்படி அவர் பூசியது விதிமுறைக்கு உட்பட்டது தான் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ரவீந்திர ஜடேஜா தனது கை விரலில் வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் வலி நிவாரணி க்ரீம் தடவியதாக போட்டி நடுவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

77
Image credit: PTI

இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஜடேஜா தனது கை விரலில் என்ன பூசிக் கொண்டிருக்கிறார். இது போன்று இதற்கு முன்னதாக நான் பார்த்ததே கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories