இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இந்தூரில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, முதல் நாள் ஆட்டத்திலேயே முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் 4 விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்த, 146 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்த, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்திருந்தது.
2ம் நாள் ஆட்டத்தை பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் தொடர்ந்தனர். இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் 2ம் நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் அஷ்வினை பந்துவீச அழைக்கவேயில்லை கேப்டன் ரோஹித். அக்ஸர் படேல், ஜடேஜாவைத்தான் வீசவைத்தார். ஆனால் முதல் ஒரு மணி நேரத்தில் விக்கெட்டே விழவில்லை. அதன்பின்னர் அஷ்வினை அழைத்து வந்ததும், ஹேண்ட்ஸ்கம்ப்பின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்த, அடுத்த 11 ரன்களுக்கு எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் ஸ்பின்னர்கள் முரளிதரன், ஷேன் வார்ன் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த நேதன் லயன்
அஷ்வினை பந்துவீச வைக்காத அந்த முதல் ஒரு மணி நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 30 ரன்கள் அடித்துவிட்டது. ஒருவேளை அஷ்வினை முன்பே பந்துவீசவைத்திருந்தால் அந்த ரன்னை குறைத்திருக்கலாம். அதை சுட்டிக்காட்டி ரோஹித்தின் கேப்டன்சியை விமர்சித்துள்ளார் கவாஸ்கர்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை ஸ்பின்னர்கள், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கை ஸ்பின்னர்கள் என்ற மேட்ச்-அப் விஷயங்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஹேண்ட்ஸ்கம்ப் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகிய 2 வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால், முதல் ஒரு மணி நேரம் அஷ்வினை பந்துவீச அழைக்கவேயில்லை ரோஹித். இடது கை ஸ்பின்னர்களான ஜடேஜாவும் அக்ஸரும் பந்துவீசி வலது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி விட்டார்களா என்ன..? கடைசியில் ஆஃப் ஸ்பின்னரான அஷ்வின் தான், வலது கை பேட்டிங் ஜோடியை பிரித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஷ்வின்..!
டாப் பிளேயரான ஹேண்ட்ஸ்கம்ப்பின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். வலது கை பேட்ஸ்மேனோ, இடது கை பேட்ஸ்மேனோ, அஷ்வின் தலைசிறந்த ஸ்பின்னர். அவரை பந்துவீச வைத்திருக்க வேண்டும். 450 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய அஷ்வினை முதல் ஒரு மணி நேரம் பந்துவீசவைக்காதது பெரிய தவறு. அஷ்வினை முன்பே வீசவைத்திருந்தால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை குறைத்திருக்கலாம் என்று ரோஹித்தின் கேப்டன்சியை கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.