சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஆஸ்திரேலியாவின் நேதன் லயனும் ஒருவர். ஆஸ்திரேலிய கண்டிஷனும் ஆடுகளங்களும் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமானவை. அப்படி இருக்கையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த ஸ்பின்னராக வளர்ந்தது, ஷேன் வார்னுக்கு அடுத்த ஸ்பின்னர் நேதன் லயன் தான்.
இந்தியாவிற்கு எதிராக இந்தூரில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோஹித், கில், ஜடேஜா ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்திய நேதன் லயன், ஷேன் வார்ன் மற்றும் முரளிதரன் ஆகிய 2 லெஜண்ட் ஸ்பின்னர்களின் சாதனையை முறியடித்தார்.
மேலும் ஆசியாவில் அதிக விக்கெட் 128* விக்கெட் வீழ்த்திய வெளிநாட்டு பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் நேதன் லயன். இதற்கு முன் ஷேன் வார்ன்(127 விக்கெட்) அந்த சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர். ஷேன் வார்னின் சாதனையை முறியடித்துள்ளார் நேதன் லயன்.