இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், தொடக்க வீரர் கேஎல் ராகுலின் தேர்வு விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உள்ளாக்கப்பட்டது.
இங்கிலாந்து தொடரிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் நன்றாக ஆடிய ராகுல், அதன்பின்னர் ஃபார்மை இழந்தார். 2022லிருந்து டெஸ்ட்டில் ராகுலின் சராசரி வெறும் 17.4 ஆகும். 2022லிருந்து டெஸ்ட்டில் ஒரு தொடக்க வீரரின் குறைந்தபட்ச சராசரி இதுதான். கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாத அதேவேளையில், டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் அணியில் இருந்தும் அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்யாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
IND vs AUS: அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய அக்ஸர் படேல்..! முதல் இன்னிங்ஸில் ஆஸி., முன்னிலை
ராகுல் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஸ்பின் பவுலிங்கை ஆடும்போது ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடுவதா, பேக் ஃபூட்டில் ஆடுவதா என்பது குறித்து ராகுலுக்கு தெளிவில்லை; குழப்பமடைந்துவிடுகிறார். ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடும்போது ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். ஆனால் ராகுல் ஃப்ரண்ட் ஃபூட்டில் அக்ராஸ் ஆடுகிறார். அப்படி ஆடும்போது பந்தை தவறவிட வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடும்போது ஸ்டிரைட் பேட்டில் ஆடுகிறார். அதனால் தான் அவரால் சிறப்பாக ஆடமுடிகிறது. ராகுல் அந்த விஷயத்தில் தவறு செய்வதாக கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.