டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக புதிய மைல்கல்..! லெஜண்ட் பட்டியலில் 3ம் இடம் பிடித்தார் நேதன் லயன்

First Published | Feb 18, 2023, 3:57 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் நேதன் லயன்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்துவருகிறது.
 

2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

Tap to resize

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 139 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் அக்ஸர் படேலும் அஷ்வினும் இணைந்து அபாரமாக ஆட, இந்திய அணி 250 ரன்களை கடந்து ஆடிவருகிறது. இந்திய அணியின் 7 விக்கெட்டுகளில் 5 விக்கெட் நேதன் லயன் வீழ்த்தியவை. 

முதல் டெஸ்ட்டில் சோபிக்காத நேதன் லயன், 2வது டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசிவருகிறார். 2வது டெஸ்ட்டில் அவர் 5வது விக்கெட்டாக கேஎஸ் பரத்தின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த விக்கெட்டின் மூலம், இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட்டில் 100 விக்கெட் வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனையை நேதன் லயன் படைத்துள்ளார். 24 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 139 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், முத்தையா முரளிதரன் 105 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்திலும் உள்ள நிலையில், நேதன் லயன் 3ம் இடத்தில் உள்ளார். 

Latest Videos

click me!