100ஆவது டெஸ்டில் ஒரு ரன் கூட எடுக்காமல் மோசமான சாதனை படைத்த புஜாரா: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

First Published Feb 18, 2023, 11:39 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சட்டீஸ்வர் புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
 

சட்டீஸ்வர் புஜாரா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

சட்டீஸ்வர் புஜாரா

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம் 72 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர்.
 

சட்டீஸ்வர் புஜாரா

இந்தியா தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ரோகித் சர்மா 13 ரன்களுடனும், கேஎல் ராகுல் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சட்டீஸ்வர் புஜாரா

இதைத் தொடர்ந்து 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்க்க முயற்சித்தனர். ஆனால், நாதன் லயான் சுழலில் கேஎல் ராகுல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, லயான் ஓவரில் ரோகித் சர்மா கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த புஜாரா ஆரம்பித்திலேயே எல்பிடபிள்யூ ஆன நிலையில், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா கேப்டனும் ரெவியூ எடுக்கவில்லை.
 

சட்டீஸ்வர் புஜாரா

இந்த நிலையில், மீண்டும் நாதன் லயான் ஓவரிலேயே புஜாரா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த முறையில் ஆஸ்திரேலியா வீரர்கள் ரெவியூவை சரியாக பயன்படுத்தி புஜாராவை ஆட்டமிழக்க செய்தனர். தனது 100ஆவது டெஸ்ட்டில் விளையாடிய புஜாரான ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

சட்டீஸ்வர் புஜாரா

புஜாரா டக் அவுட்டில் ஆட்டமிழந்து 100ஆவது டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டில் ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக திலிப் வெங்சர்கார், ஆலன் பார்டர், கோர்ட்னி வால்ஸ், மார்க் டெய்லர், ஸ்டீபென் பிளெமிங், ப்ரெண்டன் மெக்கல்லம், அலாஸ்டையர் குக் ஆகியோரது வரிசையில் தற்போது புஜாராவும் இணைந்துள்ளார்.
 

சட்டீஸ்வர் புஜாரா

நேற்றைய முதல் நாளின் போது புஜாராவின் தந்தை, மனைவி மற்றும் மகள் வந்திருந்தனர். புஜாராவிற்கு நினைவுப் பரிசாக 100ஆவது டெஸ்ட் போட்டிற்கான கேடயமும், கேப்பும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், புஜாராவிற்கு நினைவுப் பரிசு வழங்கினார். 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் 13 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார்.
 

சட்டீஸ்வர் புஜாரா

தற்போது வரையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. இதில், விராட் கோலி 14 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 14 ரன்னுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.
 

சட்டீஸ்வர் புஜாரா

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி மற்றும் மேத்யூ குன்மேன்

சட்டீஸ்வர் புஜாரா

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்

click me!