ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமியின் காதைப் பிடித்து திருகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றது.
25
முகமது ஷமி
இதைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் செய்தது. அதன்படி, முதல் நாளில் 263 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
35
முகமது ஷமி
இதில், உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம் 72 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
45
முகமது ஷமி
ஆஸ்திரேலியா 249 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் பேட்டிங் செய்தார். அப்போது முகமது ஷமி பந்து வீசினார். ஷமியின் 74.2 ஆவது ஓவரில் நாதன் கிளீன் போல்டானார். இதனை ஷமி சக வீரர்களுடன் கொண்டாடிக் கொண்டிடுந்தார்.
55
முகமது ஷமி
அப்போது பின்பக்கமாக இருந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஷமியின் இரு காதுகளையும் பிடித்து திருகியுள்ளார். இதனால், சற்று வலியால் துடித்த ஷமி பின்பக்கமாக யார் என்று பார்க்க அது அஸ்வின். வேறு வழியில்லாமல் அவரை ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.