நாதன் லயான் சுழலில் சிக்கி தவிக்கும் இந்தியா: கை கொடுக்கும் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா!

Published : Feb 18, 2023, 12:02 PM ISTUpdated : Feb 18, 2023, 12:04 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரையில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.  

PREV
112
நாதன் லயான் சுழலில் சிக்கி தவிக்கும் இந்தியா: கை கொடுக்கும் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது டெஸ்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. 
 

212
ரோகித் சர்மா கிளீன் போல்டு

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. 
 

312
புஜாரா 100ஆவது டெஸ்ட்

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம் 72 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர்.
 

412
இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது டெஸ்ட்

இந்தியா தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ரோகித் சர்மா 13 ரன்களுடனும், கேஎல் ராகுல் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

512
இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது டெஸ்ட்

இதைத் தொடர்ந்து 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்க்க முயற்சித்தனர். ஆனால், நாதன் லயான் சுழலில் கேஎல் ராகுல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
 

612
இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது டெஸ்ட்

இவரைத் தொடர்ந்து, லயான் ஓவரில் ரோகித் சர்மா கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த புஜாரா ஆரம்பித்திலேயே எல்பிடபிள்யூ ஆன நிலையில், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா கேப்டனும் ரெவியூ எடுக்கவில்லை.

712
இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது டெஸ்ட்

இந்த நிலையில், மீண்டும் நாதன் லயான் ஓவரிலேயே புஜாரா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த முறையில் ஆஸ்திரேலியா வீரர்கள் ரெவியூவை சரியாக பயன்படுத்தி புஜாராவை ஆட்டமிழக்க செய்தனர். தனது 100ஆவது டெஸ்ட்டில் விளையாடிய புஜாரான ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
 

812
இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது டெஸ்ட்

புஜாரா டக் அவுட்டில் ஆட்டமிழந்து 100ஆவது டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டில் ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக திலிப் வெங்சர்கார், ஆலன் பார்டர், கோர்ட்னி வால்ஸ், மார்க் டெய்லர், ஸ்டீபென் பிளெமிங், ப்ரெண்டன் மெக்கல்லம், அலாஸ்டையர் குக் ஆகியோரது வரிசையில் தற்போது புஜாராவும் இணைந்துள்ளார்.
 

912
ரவிச்சந்திரன் அஸ்வின்

இவரது வரிசையில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், இந்தப் போட்டியில் இடம் பெற்றார். ஆனால், அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.
 

1012
விராட் கோலி

தற்போது விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி நிலைத்து நின்று ஆடி வருகின்றனர். விராட் கோலி 14 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 15 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
 

1112
ஜடேஜா

விராட் கோலி 52 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை படைப்பார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான் 11 ஓவர்கள் வீசி ஒரு ஓவர் மெய்டன் உள்பட 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 

1212
ரவீந்திர ஜடேஜா

இந்தப் போட்டியில் கவாஜா, பேட் கம்மின்ஸ், டாட் முர்பி ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார். கவாஜாவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள், 2500 ரன்கள் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories