அதன்பின்னர் அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 8வது விக்கெட்டுக்கு 114 ரன்களை குவித்தனர். அஷ்வின் 37 ரன்கள் அடித்தார். மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல் 74 ரன்களை அடிக்க, அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களை குவித்தது. ஒரு ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை ஆடுகிறது.