உன் கவலை எங்களுக்கு புரியுது.. அதுக்கு நாங்க என்ன பண்றது..? ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு கவாஸ்கர் பதிலடி

First Published Aug 11, 2022, 5:23 PM IST

இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட ஏன் அனுமதிப்பதில்லை என்ற ஆடம் கில்கிறிஸ்ட்டின் கேள்விக்கு சுனில் கவாஸ்கர் பதிலளித்துள்ளார்.
 

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக், வங்கதேசத்தில் வங்கதேச பிரீமியர் லீக், தி ஹண்ட்ரெட், கரீபியன் பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
 

ஆனால் இவற்றில் ஐபிஎல் தான் பணக்கார டி20 லீக் தொடர். ஐபிஎல்லில் தான் கோடிக்கணக்கில் பணம் புழங்குகிறது. வெறும் இரண்டே மாதத்தில் கோடிகளில் சம்பாதிக்கலாம் என்பதால் வெளிநாட்டு வீரர்கள், அவர்களது சொந்த நாட்டிற்கு ஆடுவதை விட ஐபிஎல்லில் ஆடத்தான் விரும்புகிறார்கள்.

இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்
 

அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆடும் நிலையில், இந்திய வீரர்கள் யாரும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கப்படுவதில்லை. இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. 

வெளிநாட்டு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரியங்கள் பலவும், இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றன.

இதையும் படிங்க - இந்த பையன் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர்.! 3 ஃபார்மட்டிலும் இவன் தான் நம்பர் 1.. ஜெயவர்தனே புகழாரம்

இந்நிலையில், பிசிசிஐ இந்திய வீரர்களை ஏன் வெளிநாட்டு டி20 லீக்குகளில் ஆட அனுமதிப்பதில்லை என்று ஆஸி., முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியிருந்தார்.
 

அதற்கு பதிலளித்துள்ள இந்திய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய வீரர்களை பிக்பேஷ் லீக் அல்லது தி ஹண்ட்ரெட் ஆகிய வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர். இந்திய வீரர்கள் ஆடினால் கூடுதல் ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நாட்டின் கிரிக்கெட் வளரவேண்டும் என்ற அவர்களது அக்கறை எனக்கு புரிகிறது. ஆனால் இந்திய வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும் நோக்கில் பணிச்சுமையை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிப்பதில்லை என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!