இந்திய அணியின் பிளஸ் பாய்ண்டே இவர்கள் தான்! தமிழக வீரர்களை புகழ்ந்து தள்ளிய சுப்மன் கில்!

Published : Jul 31, 2025, 07:00 AM IST

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் ஆகியோரை பாராட்டி பேசியுள்ளார்.

PREV
14
Shubman Gill Praises Washington Sundar, Sai Sudarshan

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை (ஜூலை 31) தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணியால் இந்த தொடரை டிரா செய்ய முடியும். மிக முக்கியமான இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்திய அணி வீரர்களான தமிழ்நாட்டை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சனை வெகுவாக பாராட்டினார்.

24
வாஷிங்டன் சுந்தரை பாராட்டிய சுப்மன் கில்

"வாஷிங்டனைப் பார்த்தால், பந்துவீச்சில் எங்களுக்கு நிறைய கட்டுப்பாட்டைக் கொடுப்பவர். அவரது பேட்டிங் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. அணி சரிவை சந்திக்கும் போதெல்லாம் அதைத் தடுக்கக்கூடிய வீரர்களை எங்கள் அணியில் கொண்டிருப்பது அதிர்ஷ்டம். கீழ் நடுத்தர வரிசையில், எங்களுக்கு சில வேலைகள் தேவை என்று நாங்கள் நினைத்த பகுதிகளில் ஒன்று, எங்கள் கீழ் நடுத்தர வரிசை. வாஷிங்டன் வருவதால், அந்தப் பகுதியை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம் என்று நினைக்கிறேன்'' என்று சுப்மன் கில் தெரிவித்தார்.

34
சாய் சுதர்சனுக்கும் ஆதரவு

தொடர்ந்து சாய் சுதர்சன் குறித்து பேசிய சுப்மன் கில், ''கடைசி டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அரைசதம் அடித்தார். அதனால் அவர் மோசமான ஆட்டத்தை விளையாடினார் என்று நான் நினைக்கவில்லை. முதல் இன்னிங்சில் அவர் நல்ல ஆட்டத்தை விளையாடினார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது எந்த வீரருக்கும் அதுபோல் நடக்கலாம். ஆனால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வெளியே சாய் சுதர்சன் அரைசதம் அடித்ததாக யாரோ என்னிடம் சொன்னார்கள். எனவே அது எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ்'' என்று கூறினார்.

44
வாஷிங்டன் சுந்தர் கலக்கல்

சாய் சுதர்சன் தனக்கு வாய்ப்பு கிடைத்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரை சதம் அடித்துள்ளார். மறுபக்கம் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில் கலக்கி வருகிறார். வாஷிங்டன் சுந்தர் இந்தத் தொடரின் இதுவரையிலான மூன்று டெஸ்டுகளில் ஆறு இன்னிங்ஸ்களில் 51.25 சராசரியுடன் 205 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 7 சதமும் அடங்கும். லார்ட்ஸில் 4/22 என்ற சிறந்த பந்துவீச்சுடன், 35.85 சராசரியில் ஐந்து இன்னிங்ஸ்களில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பேட்டிங்கில் வாஷிங்டன் இந்தியாவுக்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருந்து வருகிறார். 12 போட்டிகள் மற்றும் 22 இன்னிங்ஸ்களில் 44.86 சராசரியுடன் 673 ரன்கள் எடுத்துள்ளார், இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்களும் அடங்கும். 27.87 சராசரியில் 32 விக்கெட்டுகளையும் அறுவடை செய்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories