சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 போட்டிகளில் அசத்திய வீரர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா 829 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 814 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அபிஷேக் சர்மா கடந்த 5 மாதங்களாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனாலும் அவர் நம்பர் 1 இடத்தில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
24
டி20யில் அபிஷேக் சர்மா முதலிடம்
அதாவது அபிஷேக் சர்மாவுக்கு முன்பு டிராவிஸ் ஹெட் தான் நம்பர் 1 இடத்தில் இருந்தார். ஆனால் அவர் செப்டம்பர் 2024க்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அண்மையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் ஹெட் பங்கேற்கவில்லை. இப்படியாக நீண்ட காலம் விளையாடாததால் அவர் முதல் இடத்தை இழந்தார். இதனால் அபிஷேக் சர்மா முதலிடம் சென்றார்.
34
ஐசிசி விதி இதுதான்
ஐசிசி நிர்ணயித்த விதிகளின்படி, ஒரு வீரர் தங்கள் அணியில் போட்டிகளை தவறவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகளை இழக்கிறார். டிராவிஸ் ஹெட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து டி20 போட்டிகளில் விளையாடவில்லை. பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஆஸ்ரேலியா விளையாடிய 8 டி20 போட்டிகளிலும் ஹெட் பங்கேற்கவில்லை. அதன்படி ஹெட்டின் மதிப்பீட்டு புள்ளிகள் 814 ஆகக் குறைந்துள்ளன. அதே நேரத்தில், பிப்ரவரி 2025 முதல் இந்தியா ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாததால் அபிஷேக் சர்மா மதிப்பீட்டு புள்ளிகளை இழக்கவில்லை.
அபிஷேக் சர்மா 2024 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் தனது சர்வதேச டி20 அறிமுகத்தை மேற்கொண்டார். தனது இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து, இந்திய வீரரின் அதிகபட்ச தனிப்பட்ட T20I ஸ்கோர் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டிகள் அவருக்கு அதிக ரேட்டிங்கை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.