சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்த ஷுப்மன் கில்..!

First Published Aug 23, 2022, 2:43 PM IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார் ஷுப்மன் கில்.
 

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிய இந்திய அணி 3-0 என  ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.
 

இந்த தொடரின் கடைசி போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஷுப்மன் கில் 97 பந்தில்130 ரன்களை குவித்தார். அவரது சதத்தால் தான் இந்திய அணி 289 ரன்களை குவித்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை கடைசி போட்டியில் வீழ்த்தியது. எனவே கடைசி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் ஷுப்மன் கில் வென்றார்.

இதையும் படிங்க - நீங்க தொலைஞ்சிங்கடா.. ஆசிய கோப்பைக்கு முன் பாகிஸ்தானை எச்சரிக்கும் இன்சமாம் உல் ஹக்
 

ஷுப்மன் கில் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் ஆடி 499 ரன்களை குவித்துள்ளார். இதில் நேற்று ஆடிய தனது 9வது போட்டியில் தான் முதல் சதத்தை பதிவு செய்தார். இதற்கு முந்தைய அவரது கடைசி 5 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவர் அடித்த ஸ்கோர்கள் - 64, 43, 98*, 82*, 33 ஆகும். சதத்தை ஏற்கனவே நெருங்கிவிட்ட கில்லுக்கு அது வசப்படாமல் இருந்த நிலையில் நேற்று வசப்பட்டது.

ஜிம்பாப்வேவில் ஒருநாள் போட்டியில் 130 ரன்களை குவித்ததன் மூலம், 24 ஆண்டுகால சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார் ஷுப்மன் கில்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கோலியை தூக்கி எறிய துணிந்த தேர்வாளர்கள்..! விரைவில் அணி அறிவிப்பு

1998ல் ஜிம்பாப்வேவில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 127 ரன்கள் தான், ஜிம்பாப்வேவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஹராரேவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் 130 ரன்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார் ஷுப்மன் கில்.
 

இந்த பட்டியலில் 2015ம் ஆண்டு ஹராரேவில் நடந்த ஒருநாள் போட்டியில் 124 ரன்களை குவித்த அம்பாதி ராயுடு 3ம் இடத்தில் உள்ளார்.
 

click me!