இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முழங்காலில் காயமடைந்த ஷாஹீன் அஃப்ரிடி, அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், அங்கு பாகிஸ்தான் அணியுடன் இருந்து ஃபிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருகிறார் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் 5-6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், ஆசிய கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளார்.