இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. நேற்று(18ம் தேதி) நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
25
190 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கில் - தவான் ஆகிய இருவரும் இணைந்தே அடித்துவிட்டனர். இதையடுத்து விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்த இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
நாளை(20ம் தேதி) நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 2வது போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
45
முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. எனவே 2வது போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமில்லை. மாற்றம் செய்யப்படவும் மாட்டாது.