ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த 2 கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்திய அணியின் ஆடும் லெவனில் இருக்கும் முன்னணி வீரர்கள் ஒவ்வொருவர் இடத்திற்கும் 2 மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் களமிறங்க தயாராக 30 வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டரை மாதம் இருக்கிறது. அதற்கு முன் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்கள் உள்ளன. 80-90 சதவிகித இந்திய அணி தயாராக உள்ளது. கண்டிஷனை பொறுத்து 3-4 மாற்றங்கள் செய்யப்படலாம். இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய கண்டிஷன்களிலிருந்து ஆஸ்திரேலிய கண்டிஷன் மாறுபட்டது. ஆஸ்திரேலியாவில் ஆட எந்த அணி சரியாக இருக்கும் என்று ஆராய்ந்து அந்த வீரர்களுடன் இறங்குவோம் என்றார் ரோஹித் சர்மா.