இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக பக்கா பிளானுடன் சிறப்பாக செயல்படும் ரோஹித் - டிராவிட் கூட்டணி

First Published Aug 18, 2022, 6:26 PM IST

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணி தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணி தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பான திட்டங்களை இயற்றி செயல்படுத்திவருகிறது.
 

இந்திய கிரிக்கெட் அணியின் மெயின் ஆடும் லெவனில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும், இன்றைய தேதியில் தலா 2 மாற்று வீரர்கள் உள்ளனர். அந்தளவிற்கு இந்திய அணியின் பென்ச் வலிமையாக உள்ளது.

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

இப்போதைக்கு, இந்திய கிரிக்கெட் அணி எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்து இல்லை. அது ரோஹித், கோலி, பும்ரா என எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி.. அவர்களில் ஒருவர் அல்லது அவர்கள் யாருமே இல்லாமலேயே கூட வெற்றி பெறுமளவிற்கு திறமையான இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஆட வாய்ப்பளித்து வலுவான பென்ச் பலத்துடன் உள்ளது இந்திய அணி.

இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி உட்பட எந்த வீரருமே எப்போதுமே ஆடிக்கொண்டே இருக்கப்போவதில்லை. எனவே மற்ற வீரர்களையும் முயற்சி செய்து பார்க்கவேண்டும். அந்தவகையில், நானும் ராகுல் Bhai-யும் பென்ச் வலிமையை அதிகரிப்பது என்று முடிவெடுத்தோம். ஏனெனில் இன்றைக்கு அதிகமான போட்டிகள் ஆடப்படுகின்றன. அதனால் வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதும் போதுமான ஓய்வளிப்பதும் அவசியமாகிறது.

இதையும் படிங்க - இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

ஒன்றிரண்டு வீரர்களை சார்ந்து அணி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு வீரரும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்யவேண்டும். அந்தமாதிரியான ஒரு அணியை கட்டமைக்க விரும்பினோம். அதனால் தான் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்பளிக்கப்படுகிறது. இது அவர்களுக்கு பெரியளவில் உதவும் என்று ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

click me!