இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

First Published | Aug 16, 2022, 3:36 PM IST

இந்திய அணி அண்மைக்காலமாக அதிகமான கேப்டன்களை மாற்றியது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
 

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். அதன்பின்னர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டுக்குமான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

ஆனால் காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த 7 மாதங்களில் 7 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தியிருக்கின்றனர். அதாவது 2022ம் ஆண்டில், 3 விதமான ஃபார்மட்டிலும் இந்திய அணியை மொத்தமாக  7 கேப்டன்கள் வழிநடத்தியிருக்கின்றனர்.

இதையும் படிங்க - ZIM vs IND: ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலிருந்து காயத்தால் விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரர் அறிவிப்பு

Tap to resize

1.விராட் கோலி - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்
2. கேஎல் ராகுல் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்
3. ரோஹித் சர்மா (இப்போதைய இந்திய அணியின் நிரந்தர கேப்டன்)
4. ரிஷப் பண்ட் - தென்னாப்பிரிக்க டி20 தொடர்
5. ஹர்திக் பாண்டியா - அயர்லாந்து டி20 தொடர்
6. ஜஸ்ப்ரித் பும்ரா - இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் 
7. ஷிகர் தவான் - வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர்
 

இப்போதும் கூட, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆடவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கேஎல் ராகுல் தலைமையில் முற்றிலும் வேறு வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடுகிறது.ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு தொடர்களில் ஆடுமளவிற்கு இந்திய அணியின் பென்ச் வலிமை உள்ளது.
 

இந்திய அணி அதிகமான கேப்டன்களை பயன்படுத்துவது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்துவரும் நிலையில், இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க - இந்தியாவால் அதை பண்ண முடியும்;நம்மால் முடியுமா? சத்தியமா முடியாது! பாக்.,கிரிக்கெட்டுக்கு சல்மான் பட் சவுக்கடி
 

தொடர் கேப்டன்சி மாற்றம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, ரோஹித் சர்மா தான் அனைத்து ஃபார்மட்டுக்கான இந்திய அணியின் கேப்டன்.  ஆனால் வீரர்கள் காயங்கள் அடையாமல் அவர்களது ஃபிட்னெஸை பராமரிக்கும் வகையில் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது. அதனால் சுழற்சி முறையில் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இளம் வீரர்களை வைத்துக்கொண்டுதான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி தொடரை வென்றது. இந்திய அணியில் எப்போது வேண்டுமானாலும் களமிறங்க தகுதியான 30 வீரர்கள் இந்திய  அணியில் உள்ளனர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!