ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆடவுள்ளது.
அதனால் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வரும் 18, 20, 22 ஆகிய தேதிகளில் இந்தியா - ஜிம்பாப்வே இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுந்தர் காயத்தால் விலகியுள்ளார். இங்கிலாந்தில் நடந்துவரும் ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் ஆடிவந்த வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். அதனால் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார்.
ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.