ZIM vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் புதிய 3ம் வரிசை வீரர்..! தரமான சாய்ஸ்

First Published | Aug 15, 2022, 4:00 PM IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷுப்மன் கில் தான் 3ம் வரிசையில் பேட்டிங் ஆடுவார் என்று முன்னாள் வீரர் தெவாங்  காந்தி கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. 

ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 24ம் தேதியே இந்திய அணி செல்கிறது. எனவே ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் சீனியர் மற்றும் முன்னணி வீரர்கள் கொண்ட அணி ஆடுவதால், ஜிம்பாப்வே தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி ஆடுகிறது.

இதையும் படிங்க - அடுத்தடுத்த சதங்கள்.. அலறவிடும் புஜாரா..! 5 சிக்ஸர்களுடன் காட்டடி சதம்.. வீடியோ
 

Tap to resize

சீனியர் மற்றும் முன்னணி இந்திய வீரர்கள் ஆசிய கோப்பையில் ஆடுவதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், தீபக் ஹூடா ஆகிய வீரர்கள் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
 

இந்திய அணியில் 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களில் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். எனவே ருதுராஜ் மற்றும் ஷுப்மன் கில்லுக்கு ஓபனிங் வாய்ப்பு கிடைக்காது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 205 ரன்களை குவித்து அபாரமாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியில் 3ம் வரிசையில் ஆட வாய்ப்பளிக்கப்படும் என்று முன்னாள் வீரர் தெவாங் காந்தி கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - 2011 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை திருப்பிய தோனியின் வியூகம்!ஹர்பஜன் சிங் பகிர்ந்த சுவாரஸ்யம்
 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள தெவாங் காந்தி, ஷுப்மன் கில்லை சரியான முறையில் வளர்த்துவருகிறது இந்திய அணி நிர்வாகம். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஷுப்மன் கில் அபாரமாக பேட்டிங் ஆடினார். இந்திய அணி எந்த பேட்ஸ்மேனையும் எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆடுவதற்கு தயார்படுத்திவருகிறது. எனவே ஜிம்பாப்வே தொடரில் ஷ்பமன் கில் 3ம் வரிசையில் ஆடுவார் என்று நினைக்கிறேன். ஒருநாள் உலக கோப்பைக்கு ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக உருவாக்கலாம். 3ம் வரிசையில் டாப் ஆர்டர் ஸ்லாட் தான் என்று முன்னாள் வீரர் தெவாங் காந்தி கூறினார்.
 

Latest Videos

click me!