டக் அவுட் ஆகுறதுக்கா உனக்கு கோடிகளை கொட்டி கொடுக்குறோம்.? ரோஸ் டெய்லரை பளார்னு அறைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஓனர்

First Published Aug 13, 2022, 9:30 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்காக ஆடியபோது, ஒரு போட்டியில் டக் அவுட்டானபோது அந்த அணியின் உரிமையாளர் தன்னை பளாரென்று கன்னத்தில் அறைந்ததாக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஸ் டெய்லர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
 

நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரோஸ் டெய்லர். 2006ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு வரை நியூசிலாந்துக்காக ஆடிய ரோஸ் டெய்லர், 112 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7684 ரன்களை குவித்துள்ளார். 
 

236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் ஆடி முறையே 8602 மற்றும் 1909 ரன்களை குவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட்டில் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோஸ் டெய்லர்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் புறக்கணிப்பு..! ரிக்கி பாண்டிங் சொல்லும் நியாயமான காரணம்

ஐபிஎல்லில் 2008ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை ஆர்சிபி அணிக்காக ஆடிய ரோஸ் டெய்லர், அபாரமாக பேட்டிங் ஆடி அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்தார். அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா ஆகிய அணிகளுக்கும் ஆடியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட ரோஸ் டெய்லர், "Ross Taylor: Black & White" என்ற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். சுயசரிதையில் உண்மைகளை மட்டுமே எழுதவேண்டும் என்பதால், தனது கெரியரில் நடந்த அனைத்து சம்பவங்களையும் உண்மையாக எழுதியுள்ளார்.

இதில் அவர் ஐபிஎல் குறித்து குறிப்பிட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது, ஒரு போட்டியில் டக் அவுட்டானபோது, ராஜஸ்தான் அணி உரிமையாளர்களில் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார். ரோஸ் டெய்லர் 2011ம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார்.

இதையும் படிங்க - நீங்க தோனியை யூஸ் பண்ண முடியாது.! சிஎஸ்கேவிற்கு செக் வைத்த பிசிசிஐ
 

இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ள ரோஸ் டெய்லர், அதிகமான பணத்தை வீரர்களுக்கு ஊதியமாக கொடுத்து ஒப்பந்தம் செய்யும் அணிகளுக்கு, அந்த வீரர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருப்பது இயல்புதான். அந்த தொகைக்கு தகுதியானவர் தான் என்று நிரூபிக்க வேண்டிய கடமை வீரர்களுக்கும் உள்ளது. ஆர்சிபி அணிக்காக நன்றாக ஆடினேன். அந்த அணிக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. அதுவே ஒரு புதிய அணிக்கு ஆடும்போது அந்த வசதிகள் எல்லாம் இருக்காது. 2-3  போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் ஓரங்கட்டப்படும் வாய்ப்புள்ளது.

நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக மொஹாலியில் நடந்த போட்டி ஒன்றில், 195 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, நான் ரன்னே அடிக்காமல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினேன். அதன்பின்னர், ஹோட்டலின் டாப் ஃப்ளோரில் இருந்த Bar-ல் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தினர் அனைவரும் இருந்தனர். லிஸ் ஹர்லி ஷேன் வார்னுடன் இருந்தார். அப்போது, அணி உரிமையாளர்களில் ஒருவர், ரோஸ்(டெய்லர்) நீங்கள் டக் அவுட்டாவதற்காகவா நாங்கள் கோடிகளை கொட்டிக் கொடுக்கிறோம் என்று கேட்டு என் கன்னத்தில் 3-4 அறைகளை விட்டார் என்று டெய்லர் கூறியிருக்கிறார்.

click me!