ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் புறக்கணிப்பு..! ரிக்கி பாண்டிங் சொல்லும் நியாயமான காரணம்

First Published | Aug 13, 2022, 5:04 PM IST

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி எடுக்கப்படாதது விவாதத்துக்குள்ளான நிலையில், இந்திய அணியில் அவரை விட சிறந்த பவுலர்கள் பலர் உள்ளனர் என்று ரிக்கி பாண்டிங் கருத்து கூறியிருக்கிறார்.
 

ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த 2 கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
 

ஆசிய கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. பும்ரா காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியாதபோதும், சீனியர் பவுலரான முகமது ஷமி ஆசிய கோப்பைககன அணியில் எடுக்கப்படவில்லை. 

இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மட்டுமல்ல; ஆசிய கோப்பையையும் இந்த அணி தான் வெல்லும்.! ரிக்கி பாண்டிங் அதிரடி

Tap to resize

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மட்டுமே சீனியர் ஃபாஸ்ட் பவுலர். அவருடன் இளம் ஃபாஸ்ட் பவுலர்களான ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர்.  ஷமி எடுக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஆடிய ஷமி, நமீபியாவுக்கு எதிராக ஆடியதுதான் கடைசி டி20  போட்டி. அதன்பின்னர் இந்திய டி20 அணியில் ஷமி எடுக்கப்படவேயில்லை. டி20 உலக கோப்பைக்கு பின் 11 ஃபாஸ்ட் பவுலர்கள் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக ஆடியிருக்கின்றனர். ஆனால் ஷமிக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் ஷமி டி20 அணியில் புறக்கணிக்கப்படுகிறார். 

இதையும் படிங்க - ராகுல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்.. ரோஹித்தின் புதிய ஓபனிங் பார்ட்னர் இவர்தான்

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், ஷமி மிகச்சிறந்த பவுலர். நீண்டகாலமாக  இந்தியாவிற்காக சிறப்பாக பந்துவீசிவரும் அனுபவம் வாய்ந்த பவுலர். அவரது பலங்களை பார்த்தால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பவுலர் என்பது தெரியும். டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அவரை விட இந்திய அணியில் சிறந்த பவுலர்கள் பலர் இருக்கின்றனர். ஆசிய கோப்பைக்கான அணியில் 3 ஃபாஸ்ட் பவுலர்களை மட்டுமே இந்தியா தேர்வு செய்துள்ளது. 4 பவுலர்களை எடுத்திருந்தால், அவர் கண்டிப்பாக அணியில் இருந்திருப்பார் என்று பாண்டிங் தெரிவித்தார்.
 

Latest Videos

click me!