ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து நடக்கவுள்ள நிலையில், அந்த 2 கோப்பைகளையும் வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக இந்திய அணியில் தனது இடத்தை பிடித்துவிட்டார். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாது தினேஷ் கார்த்திக்கே 7வது பேட்ஸ்மேனாக இறங்குகிறார் என்றால், இந்திய அணி 4 பவுலர்களுடன் மட்டுமே ஆடமுடியும். ஹர்திக் பாண்டியா 5வது பவுலராக இருப்பார். அது கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லாமல் செய்துவிடும்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக்குடனான போட்டி குறித்து கேள்விக்கு பதிலளித்த ரிஷப் பண்ட், நாங்கள் எங்களுக்குள் போட்டி என்று கருதவில்லை. இருவருமே தனித்தனியாக எங்களது 100% பங்களிப்பை அணிக்காக அளிக்கிறோம். மற்றவை எல்லாம் பயிற்சியாளர், கேப்டன், அணி நிர்வாகம் என்னை நினைக்கிறார்கள் என்பதை பொறுத்தது என்று ரிஷப் பண்ட் கூறினார்.