இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம்..! இதுதான் பேட்டிங் ஆர்டர்

First Published | Aug 12, 2022, 5:23 PM IST

இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவரைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சபா கரிம் கருத்து கூறியுள்ளார்.
 

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து நடக்கவுள்ள நிலையில், அந்த 2 கோப்பைகளையும் வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. 
 

இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என பேட்டிங் ஆர்டர் வலுவாக இருக்கிறது.
 

Tap to resize

தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக இந்திய அணியில் தனது இடத்தை பிடித்துவிட்டார். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாது தினேஷ் கார்த்திக்கே 7வது பேட்ஸ்மேனாக இறங்குகிறார் என்றால், இந்திய அணி 4 பவுலர்களுடன் மட்டுமே ஆடமுடியும். ஹர்திக் பாண்டியா 5வது பவுலராக இருப்பார். அது கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லாமல் செய்துவிடும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையின் டாப் 3 பேட்டிங் ஆர்டர்..! 2 இடத்திற்கு 4 வீரர்களுக்கு இடையே போட்டி
 

எனவே மேற்கூறிய வீரர்களில் தினேஷ் கார்த்திக்கை மட்டுமே நீக்க வாய்ப்புள்ளது. மற்ற வீரர்களை நீக்க வாய்ப்பில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக்கை உட்காரவைக்க இந்திய அணி நிர்வாகம் விரும்புமா என்று தெரியவில்லை.
 

இதுகுறித்துத்தான் பேசியுள்ளார் முன்னாள் வீரர் சபா கரிம். ”இந்திய அணியின் 4ம் வரிசையில் இறங்கப்போவது யார் என்பதை உறுதி செய்யவேண்டும். தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை மட்டும் உறுதி செய்தால்தான், 4ம் வரிசை வீரரை உறுதிப்படுத்த முடியும். இவர்கள் இருவரில் ஒருவர் தான் என்று முடிவு செய்துவிட்டால் சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசையில் ஆடுவார். அதுதான் அவருக்கான பேட்டிங் ஆர்டர். 
 

இந்திய அணி 5 பவுலர்கள் மற்றும் 6வது பவுலிங் ஆப்சனாக ஹர்திக் பாண்டியாவுடன் ஆடிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறது. தினேஷ் கார்த்திக் ஆடினால் 4 பவுலர்களுடன் ஹர்திக் பாண்டியா 5வது பவுலராக இருப்பார். அப்படி இருந்தால் பாண்டியா அவரது முழு 4 ஓவர் கோட்டாவையும் வீச நேரிடும். கேப்டன் ரோஹித் சர்மா 5 பவுலர்களுடன் கூடுதலாக ஹர்திக் பாண்டியாவை 6வது பவுலிங் ஆப்சனாக வைத்து ஆடத்தான் விரும்புவார்.  

இதையும் படிங்க - கங்குலி தலைமையில் அவரது தளபதிகளுடன் களமிறங்கும் இந்தியா மகாராஜாஸ்..! உலக ஜெயிண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை
 

எனவே, ரோஹித் - ராகுல் தொடக்க வீரர்கள். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் என்ற பேட்டிங் ஆர்டர் தான் சரியாக இருக்கும் என்று சபா கரிம் கூறியுள்ளார்.
 

Latest Videos

click me!