இந்த பையனிடம் அந்த திறமை இருக்கு.. இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரரை பரிந்துரைத்த ஜெயவர்தனே

First Published Aug 11, 2022, 6:48 PM IST

ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்குவதற்கான  திறமை இருக்கிறது என்று இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே கருத்து கூறியிருக்கிறார்.
 

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்த 2 தொடர்களுக்காகவும் இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 கோப்பைகளையும் தூக்கும் முனைப்பில் உள்ளது. கோப்பையை வெல்லும் உத்தியை அறிந்த ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை ஆகிய 3 கோப்பைகளையும் வெல்லும் உறுதியில் உள்ளது இந்திய அணி.

இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்
 

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டி20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி, பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது.
 

அந்தவகையில், எந்த பேட்ஸ்மேனும் எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆட ஏதுவாக,  பேட்டிங் ஆர்டர் மாறி மாறி இறக்கப்படுகிறார்கள். ரிஷப் பண்ட் ஒன்றிரண்டு போட்டிகளில் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். கேஎல் ராகுல் காயத்தால் ஆடாததால் தான் ஓபனிங்கில் இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல் ஆசிய கோப்பையில் ஆடுகிறார். டி20 உலக கோப்பையிலும் ஆடுவார். எனவே அவர் தான் தொடக்க வீரராக இறங்குவார்.

இதையும் படிங்க உன் கவலை எங்களுக்கு புரியுது.. அதுக்கு நாங்க என்ன பண்றது..? ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு கவாஸ்கர் பதிலடி

இந்நிலையில், இந்திய அணியின் ஓபனிங் பேட்டிங் குறித்து பேசியுள்ள இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே, இந்தியா அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளித்து தொடர்ச்சியாக பரிசோதித்துவருகிறது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இந்திய இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு. ரிஷப் பண்ட்டே கூட ஓபனிங்கில் இறங்கலாம். அவர் உள்நாட்டு போட்டிகளில் பெரிதாக ஓபனிங்கில் ஆடியதில்லை என்றாலும், அவருக்கு அந்த திறமை இருக்கிறது என்று ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
 

click me!