Rohit Sharma: கேப்டன்சியில் இருந்து நீக்கம்..! முதன் முறையாக மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா..!

Published : Oct 08, 2025, 03:20 PM IST

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ரோகித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் ஒரு வீரராக அணியில் இடம்பிடித்துள்ளார்.

PREV
14
கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா நீக்கம்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஓடிஐ கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா ஓடிஐ அணியில் ஒரு வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

24
மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ சுற்றுப்பயணத்தில் ஒரு வீரராக அணியில் இடம்பிடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ள ரோகித் சர்மா, ''நான் அந்த அணியை விரும்புகிறேன். அவர்களுடன் விளையாடுவதை விரும்புகிறேன். தற்போதைய 50 ஓவர் உலக சாம்பியனுக்கு (ஆஸ்திரேலியா) எதிராக விளையாடுவதை விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற CEAT கிரிக்கெட் ரேட்டிங்ஸ் விருது வழங்கும் விழாவில் ரோகித் சர்மா இவ்வாறு பேசியுள்ளர்.

34
அணியின் அணுகுமுறையை மாற்றினோம்

இந்த விழாவில் கேப்டனாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்காக ரோகித் சர்மாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 2024ல் இந்திய அணியை டி20 உலகக் கோப்பை பட்டத்திற்கு வழிநடத்தியது குறித்துப் பேசிய ரோகித் சர்மா, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தனது அணிக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது என்றார்.

''பலமுறை நாங்கள் ஐசிசி இறுதிப்போட்டிகளில் நெருங்கி வந்து தோற்தோம். ஆகையால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்து நானும் பயிற்சியாளர் டிராவிட்டும் அணியின் அணுகுமுறையை மாற்றினோம்'' என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

44
ரோகித்தை வெளியேற்ற துடிக்கும் கம்பீர்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கினார். அவர் கோலியையும், ரோகித்தையும் அணியில் இருந்து வெளியேற்ற பார்க்கிரார் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக ரோகித் ஏதும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிஐயின் கிங் ரோகித் சர்மா

ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மறுக்க முடியாத ஒரு ஆல்-டைம் கிரேட் ஆவார். அவர் 273 போட்டிகளில் 265 இன்னிங்ஸ்களில் 48.76 சராசரி மற்றும் 92.80 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 11,168 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் மற்றும் 58 அரை சதங்கள் அடங்கும். அவர் இந்தியாவின் நான்காவது அதிக ஒருநாள் ரன் குவித்த வீரர் ஆவார்.

Read more Photos on
click me!

Recommended Stories