கடுமையான பயிற்சித் திட்டத்தை முடித்த பிறகு, தோனி இப்போது ட்ரோன்களை இயக்க சான்றளிக்கப்பட்டுள்ளார். "கருடா ஏரோஸ்பேஸ் உடன் எனது டிஜிசிஏ ட்ரோன் பைலட் சான்றிதழ் திட்டத்தை முடித்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தோனி ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸ் பிராண்ட் அம்பாசிடர் தோனி
கருடா ஏரோஸ்பேஸ் ஒரு டிஜிசிஏ-அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனம் (RPTO) ஆகும். இந்த நிறுவனம் இதுவரையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பைலட்டுகளுக்கு பயிற்சி அளித்துள்ளது.
தோனியின் சாதனை குறித்துப் பேசிய கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அக்னீஷ்வர் ஜெயப்பிரகாஷ், தங்களது பிராண்ட் அம்பாசிடர் இந்தத் திட்டத்தை முடித்ததில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.