ரோகித் சர்மா
இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரோகித் சர்மா. இந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய தோல்வி அடைந்திருந்தாலும், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடச் செய்தார்.
டி20 கிரிக்கெட்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய கோப்பையை தோனிக்கு பிறகு 2ஆவது முறையாக ரோகித் சர்மா கைப்பற்றி கொடுத்துள்ளார். எம்.எஸ்.தோனி 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று கொடுத்த நிலையில் ரோகித் சர்மா 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் டிராபியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வ்?
இதையடுத்து நடந்த முக்கியமான தொடரான உலகக் கோப்பை 2023 தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
ஹிட்மேன் ரோகித் சர்மா
அதன் பிறகு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்திய அணி
எனினும், இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரையில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
டி20 உலகக் கோப்பை 2024
இந்த நிலையில் தான் இந்த உலகக் கோப்பை 2023 தொடருடன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இடம் பெற்று விளையாடினார்.
ரோகித் சர்மா - உலகக் கோப்பை 2023
ஹிட்மேன், சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா அதிரடிக்கு பெயர் போனவர். அவர், டி20 கிரிக்கெட்டில் இல்லையென்றால், அந்த கிரிக்கெட்டை பார்ப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும், என்று நினைக்கும் ரசிகர்கள் ஏராளாம்.
ரோகித் சர்மா
அந்தளவிற்கு அதிரடியாக விளையாடக் கூடியவர். ஆனால், அவர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியாகும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவர் மட்டுமின்றி, விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது.
டி20 கிரிக்கெட் ஓய்வு ரோகித் சர்மா
தற்போது 36 வயதாகும் ரோகித் சர்மா, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. எனினும், இதுதொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.