என் வாழ்க்கையில் அடுத்த சேப்டர் – திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

First Published | Nov 21, 2023, 1:13 PM IST

ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரகுநாதனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

வெங்கடேஷ் ஐயர்

ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக இந்திய அணியின் இடம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். https://www.instagram.com/p/Cz5WJ_Avr0i/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

ஸ்ருதி ரகுநாதன்

இதில், 10 போட்டிகளில் விளையாடி 370 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். இதில், 37 பவுண்டரி, 14 சிக்ஸர்கள் அடங்கும். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார்.

Tap to resize

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 தொடரில் இடம் பெற்றார். இதுவரையில் 9 டி20 போட்டிகளில் 133 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

வெங்கடேஷ் ஐயர் நிச்சயதார்த்த புகைப்படம்

இதே போன்று 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 24 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், பெரிதாக ஒன்றும் சோபிக்காத நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பிறகு நடந்த 2022 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 182 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம், ஒரு சதம் உள்பட 404 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 104 ரன்கள். மேலும், 86 பவுண்டரியும், 42 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.

வெங்கடேஷ் ஐயர் – ஸ்ருதி ரகுநாதன் நிச்சயதார்த்தம்

இந்த நிலையில் தான் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிய நிலையில், திருமண வாழ்க்கையில் தனது அடுத்த இன்னிங்ஸை விளையாட இருக்கிறார். ஆம், வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரங்கநாதனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர், என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!