ஜஸ்ப்ரித் பும்ரா
அதுமட்டுமின்றி இந்திய அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இந்தியா 2ஆவது முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
டீம் இந்தியா
இந்த நிலையில் ஐசிசி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம். இந்திய ரூபாய் மதிப்பில் ஆஸ்திரேலியாவிற்கு ரூ.33 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
உலகக் கோப்பை 2023
இதே போன்று 2ஆவது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.16 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. அரையிறுதியோடு வெளியேறிய நியூசிலாந்திற்கு ரூ.6.5 கோடியும், தென் ஆப்பிரிக்காவிற்கு ரூ.6 கோடி வரையிலும் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023
இது தவிர லீக் போட்டிகளுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு தலா 86 லட்சம் ரூபாய் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், லீக் சுற்றில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் ஒரு போட்டிக்கு ரூ.33 லட்சம் வரையில் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி
இந்தியாவிற்கு எதிராக நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ரூ.33 கோடியை பரிசுத் தொகையாகவும் அள்ளிச் சென்றது.
ரோகித் சர்மா
இந்த நிலையில், இந்திய அணியினரின் ஓய்வறைக்கு சென்ற பிரதமர் மோடி, ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா என்று ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி தனது ஆறுதலை கூறியுள்ளார்.
விராட் கோலி
உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா
நாங்கள் ஒரு சிறந்த போட்டியைக் கொண்டிருந்தோம், ஆனால் நேற்று குறுகிய காலத்தில் போட்டி முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம், ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து வழி நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்தது சிறப்பானது மற்றும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.