Rishabh Pant Apologizes After India’s Heavy Defeat vs South Africa: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அடைந்த மோசமான தோல்விக்காக இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். வலுவாக மீண்டு வருவோம் என்று அவர் கூறியுள்ளார்.
கவுகாத்தியில் நடந்த இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது. அத்துடன் டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்துள்ளது. சுப்மன் கில் காயம் காரணமாக விலகிய நிலையில், பொறுப்பு கேப்டன் ரிஷப் பண்ட் சரியான முறையில் அணியை வழிநடத்தவில்லை.
24
ரிஷப் பண்ட் கேப்டன்சி, பேட்டிங் மோசம்
மேலும் அவரது பேட்டிங்கும் மோசமான நிலையில் இருந்தது. ரிஷப் பண்ட் 2 டெஸ்ட்கல் நான்கு இன்னிங்ஸ்களிலும் வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்து, 12.25 என்ற மோசமான சராசரியைக் கொண்டிருந்தார். கேப்டன்சியிலும் பீல்டிங் செட்டிங் மற்றும் பவுலர்களை ரொட்டேட் செய்வதில் அவர் சரிவர செயல்படவில்லை. இதன் காரணமாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது.
34
ரிஷப் பண்ட் மன்னிப்பு
இந்த நிலையில், சொந்த மண்ணில் இந்திய அணியின் படுதோல்விக்காக ரிஷப் பண்ட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் போதுமான அளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு அணியாகவும், தனிநபர்களாகவும், நாங்கள் எப்போதும் உயர் மட்டத்தில் செயல்பட்டு கோடிக்கணக்கான இந்தியர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க விரும்புகிறோம். இந்த முறை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாததற்கு மன்னிக்கவும்.
ஆனால், விளையாட்டு என்பது ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும் கற்றுக்கொள்ள, மாற்றியமைக்க மற்றும் வளர கற்றுக்கொடுக்கிறது. இந்தியாவுக்காக விளையாடுவது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய மரியாதை. இந்த அணிக்கு என்ன திறன் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் கடினமாக உழைத்து, மீண்டும் ஒன்றிணைந்து, கவனம் செலுத்தி, ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும் வலுவாக மீண்டு வருவோம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி! ஜெய் ஹிந்த்'' என்று தெரிவித்துள்ளார்.