IND vs SA முதல் ஓடிஐ: இந்திய அணியில் சிக்சர் மன்னன் நீக்கம்! சிஎஸ்கே கேப்டனுக்கு இடம்! பிளேயிங் லெவன்!

Published : Nov 27, 2025, 02:57 PM IST

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் 30ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடர்

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி ராஞ்சியில் வரும் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது.

24
ஜெய்ஸ்வால், ரோகித் ஓப்பனிங்

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் அடைந்ததால் கே.எல்.ராகுல் ஓடிஐ தொடருக்கு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை பார்த்தால், 'ஹிட்மேன்' ரோகித் சர்மா ஓப்பனிங்கில் களமிறங்குவார். சுப்மன் கில் இல்லாததால் ஓடிஐ தொடரில் இடம்பிடித்துள்ள ஜெய்ஸ்வால் ரோகித்துடன் ஒப்பனிங்கில் களம் காண வாய்ப்புள்ளது.

ரிஷப் பண்ட் இல்லை

ஒன் டவுனில் விராட் கோலி களமிறங்குவார். இதனை தொடர்ந்தது கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கி விக்கெட் கீப்பராகவும் இருப்பார். இதனால் அதிரடி வீரர் சிக்சர் மன்னன் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை. 

இதன்பிறகு சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் களமிறங்குவார். காயம் அடைந்த ஷ்ரேயாஷ் ஐயருக்கு பிறகு திலக் வர்மா மிடில் வரிசையில் களம் காண்பார். ஆல்ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

34
வாஷிங்டன் அல்லது ஜடேஜா

ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை குல்தீப் யாதவ் வாஷிங்டன் அல்லது ஜடேஜாவுடன் இருப்பார். பாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை ஹர்சித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் இடம்பெறுவார்கள். பாஸ்ட் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டியும் இடம் பெறலாம். அதிரடி வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரல், பிரசித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை.

44
இந்திய அணியின் பிளேயிங் லெவன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், ருத்ராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்.

Read more Photos on
click me!

Recommended Stories