தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ் தொடரில் மோசமான தோல்வியை தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை விட கீழாக 5வது இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது மட்டுமின்றி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாக பறிகொடுத்துள்ளது. இந்த தொடரில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா படுமோசமாக விளையாடியுள்ளது.
25
ரசிகர்கள் ஆதங்கம்
விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால் சொந்த மண்ணில் கொஞ்சம் கூட வெற்றிக்காக போராடாமல் முழுமையாக நமது அணி சரண் அடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் சொந்த மண்னில் இந்தியாவை அசைக்க முடியாது. ஆனால் இப்போது நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக இழந்துள்ளது அணித் தேர்வில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
35
WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா 5வது இடம்
இதனால் பிசிஐஐ மீதும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் (WTC Points Table) இந்திய அணி பாகிஸ்தானுக்கு கீழே சென்று படுமோசமான நிலையில் உள்ளது.
அதாவது இந்திய அணி இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் 1 டிராவுடன் 52 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. அதிகப் போட்டிகளில் விளையாடிய போதிலும் இந்திய அணியின் வெற்றி சதவீதம் (48.15 PCT)குறைவாக உள்ளது.
பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் இந்தியா விட பாகிஸ்தான் அதிக வெற்றி சதவீதம் (50.00) வைத்துள்ளதால் 4வது இடத்தில் அமர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 100% வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா அணி 4 போட்டிகளில் 3ல் வெற்றி, ஒன்றில் தோல்வி அடைந்து 36 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இலங்கை 2ல் இரண்டில் விளையாடி ஒன்றில் வென்று, ஒன்றை டிரா செய்து 3வது இடத்தில் உள்ளது.
55
பைனல் செல்வது கஷ்டம் தான்
இந்திய அணிக்கு மேலே ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் என பலம்வாய்ந்த அணிகள் உள்ளன. இனிமேல் இந்திய அணி 2026 ஆகஸ்டில் தான் இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். அடுத்து அக்டோபரில் நியூசிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்.
2027 தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். இந்த மூன்று தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் WTC பைனலை நினைத்துக் பார்க்க முடியும். ஆகையால் இம்முறையும் இந்தியா பைனலுக்கு செல்வது கஷ்டம் தான்.