சொந்த மண்ணில் 408 ரன்கள் வித்தியாசம்.. படுதோல்வியை சந்தித்த இந்திய அணி.. புதிய வரலாறு படைத்த SA

Published : Nov 26, 2025, 01:16 PM IST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தென்னாப்பிரிகா அணி 2 - 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

PREV
14
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிகா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிகா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக சுமார் 25 அண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொரைக் கைப்பற்றி அந்த அணி அசத்தி உள்ளது. கௌகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், “முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிகா அணி சிறப்பான பேட்டிங் பெர்பாமென்ஸ் அளித்ததைத் தொடர்ந்து அந்த அணி 489 ரன்களைக் குவித்தது.

24
திணறிய இந்திய வீரர்கள்

இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் ஜெஸ்வால் மட்டும் அரை சதம் கடந்து 58 ரன்கள் சேர்த்தார். அவரை தவிர்த்து அனைத்து வீரர்களும் மிகவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் இந்திய அணி வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

34
இந்திய அணிக்கு இமாலய இலக்கு

288 ரன்கள் லீடிங்கில் இருந்த தென்னாப்பிரிகா இரண்டாவது இன்னிங்சிலும் சிறந்த பங்களிப்பை ஆற்றியது. இரண்டாவது இன்னிங்சில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 250 ரன்கள் சேர்த்தது. 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இரண்டாவது இன்னிங்சிலாவது விக்கெட்டுகளை இழக்காமல் இந்திய அணி போட்டியை டிரா செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

44
வரலாற்று வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிகா

ஆனால் எதிரணியினரின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். தோல்வியை தவிர்க்கும் பொருட்டு தமிழக வீரர் சாய் சுதர்சன் 139 பந்துகளை எதிர் கொண்டு நேரத்தைக் கடத்தினார். அதே போன்று ரவீந்திர ஜடேஜா 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய ஸ்கோர் வித்தியாசத்துடன் தென்னாப்பிரிகா வெற்றி பெற்றது இந்த போட்டியில் தான்.

Read more Photos on
click me!

Recommended Stories