விராட் கோலியின் மூத்த சகோதரர் விகாஸ் கோலி த்ரெட்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தேவையில்லாத தலையீடுகள், முன்பு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு வெற்றியைத் தந்த ஒரு அமைப்பை சீர்குலைத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தப் பதிவு அவரை விமர்சிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
தேவையில்லாமல் மாற்றி, அதிகாரம் செய்ய முயற்சி
"வெளிநாட்டு மண்ணில்கூட வெற்றி பெறுவதற்காக விளையாடிய காலம் ஒன்று இருந்தது. இப்போது இந்தியாவிலேயே போட்டியை காப்பாற்ற போராடுகிறோம். நன்றாக இருந்த விஷயங்களை தேவையில்லாமல் மாற்றி, அதிகாரம் செய்ய முயற்சித்தால் இதுதான் நடக்கும்'' என்று விகாஸ் கோலி தனது த்ரெட்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.