IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 549 ரன்கள் சேஸ் செய்ய வேண்டும். 2வது இன்னிங்சிலும் இந்திய அணி 2 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 549 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. அந்த அணி வீரர் முத்துசாமி சிறப்பாக விளையாடி சதம் (109 ரன்கள்) விளாசினார். மார்கோ யான்சன் அதிரடியாக 91 பந்தில் 7 சிக்சர்களுடன் 93 ரன்கள் நொறுக்கினார்.
24
தென்னாப்பிரிக்கா அணி டிக்ளேர்
பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 290 ரன்கள் பின்தங்கியது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் (58) அரை சதம் அடித்தார். வாஷிங்டன் சுந்தரும் (48) நன்றாக விளையாடினார். நமது பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய மார்கோ யான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கிரிஸ்டன் ஸ்டப்ஸ் சூப்பர் பேட்டிங்
தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் இன்றைய நாளில் மிக நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். மிகவும் பொறுமையாக விளையாடிய அதிரடி வீரர் கிரிஸ்டன் ஸ்டப்ஸ் 180 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டோனி ஷி சோர்ஸி 49 ரன்கள் அடித்தார்.
முல்டர், ரிக்கல்ட்டன் தலா 35 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தென்னாப்பிரிக்கா டிக்ளேர் செய்ததால் இந்திய அணிக்கு 549 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
34
இந்திய அணி 1 விக்கெட் இழந்து தடுமாற்றம்
இந்திய அணி 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. அதுவும் 21 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்துள்ளது. ஜெய்ஸ்வால் 13 ரன்னில் யான்சன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அதன்பிறகு கே.எல்.ராகுலும் 6 ரன்னில் சைமன் ஹார்மரின் சூப்பர் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார். 2வது டெஸ்ட்டில் இந்த இமாலய இலக்கை சேஸ் செய்து வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம். இந்திய அணியால் இந்த போட்டியை இனிமேல் டிரா மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் மார்கோ யான்சனின் அபாயகரமான பவுன்ஸ் பந்து, சைமன் ஹார்மர், கேசவ் மகாராஜ் ஆகியோரின் ஸ்பின் பந்துகளை சமாளித்து டிரா செய்ய கடுமையாக போராட வேண்டும். இன்றைய 4ம் நாளில் ஒரு விக்கெட் இழந்து விட்டதால், நாளை கடைசி நாள் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும்.
ஆனால் கடைசி நாளில் பிட்ச் பவுலிங்குகுக்கு ஓரளவு கைகொடுக்கும். ஸ்விங், பவுன்ஸ் இருக்கும். ஆகையால் இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. அதே வேளையில் இந்தியாவை சொந்த மண்ணில் 2-0 என வொயிட் வாஷ் செய்து வரலாறு படைக்க தென்னாபிரிக்காவுக்கு அதிக வாய்ப்புள்ளது.