தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்வியால் தான் பதவி விலகுவது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியசாத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வொயிட் வாஷ் செய்து சாதனை படைத்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
24
கம்பீர் தலைமையில் மிக மோசம்
அதுவும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 2-0, ஆஸ்திரேலியாவில் அவர்கள் மண்ணில் 3-1, இப்போது தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கம்பீர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
34
முடிவு பிசிசிஐ கையில்
இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு பிறகு கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களின் எதிர்காலம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கம்பீர், ''இது பிசிசிஐ முடிவெடுக்க வேண்டிய விஷயம். நான் இதற்கு முன்னரும் இதை சொல்லியிருக்கிறேன். இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் அல்ல. நான் தான் இங்கிலாந்தில் டிரா செய்து கொடுத்தேன். சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றேன். இது கற்றுக்கொண்டிருக்கும் அணி'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய கவுதம் கம்பீர், ''தோல்விக்கு ஒரு தனிநபர் மட்டும் பொறுப்பு அல்ல. எல்லோரும் பொறுப்பு. ஆனால் தவறு என்னிடம் இருந்தே தொடங்குகிறது. நாம் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். 95/1 என்ற நிலையில் இருந்து 122/7 என சரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு தனிப்பட்ட நபரையோ அவர்களின் தவறான ஷாட்டையோ குற்றம் சொல்ல முடியாது. தவறு எல்லோரிடமும் இல்லை. நான் தனிப்பட்டவர்களைக் குறை சொன்னதில்லை, எதிர்காலத்திலும் சொல்ல மாட்டேன்'' என்று கூறினார்.