ஆர்சிபி வீரர் லுங்கி இங்கிடி ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி சேர்க்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானியை சேர்த்துள்ளது. லுங்கி இங்கிடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக தென்னாப்பிரிக்க தேசிய அணியுடன் இணைவதற்காக ஆர்சிபியை விட்டு வெளியேறுகிறார். இந்த மாற்றம் மே 26, 2025 முதல் அமலுக்கு வரும் என்று ஐபிஎல் மீடியா அட்வைசரி தெரிவித்துள்ளது.
24
ஆர்சிபி அணியில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக பிளெசிங் முசரபானி
28 வயதான பிளெசிங் முசரபானி அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் ஜிம்பாப்வேக்காக 70 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது நிலையான வேகம் மற்றும் பவுன்ஸ் மூலம் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் தனது நாட்டிற்காக 12 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 55 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பிளெசிங் முசரபானி ரூ.75 லட்சத்துக்கு ஆர்சிபி அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
34
ஆர்சிபி அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி
ஆர்சிபி அணி ஏற்கனவே 17 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இப்போது ஆர்சிபி 8 வெற்றிகள், 3 தோல்விகள் மற்றும் ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ரோவ்மன் பவலுக்கு மாற்றாக சிவம் சுக்லாவை ஒப்பந்தம் செய்துள்ளது.
மேற்கிந்திய ஆல்ரவுண்டரான ரோவ்மன் பவல் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்துள்ள லெக் ஸ்பின்னரான சுக்லா, மத்தியப் பிரதேசத்திற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுகிறார். அவர் ரூ.30 லட்சத்திற்கு கொல்கத்தா அணியில் இணைவார்.
லெக் ஸ்பின்னரான சுக்லா, 8 டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிளேஆஃப் நம்பிக்கைகள் தகர்க்கப்பட்ட நிலையில், SRH அணிக்கு எதிரான போட்டி KKR அணிக்கு புதிய திறமைகளை சோதித்து, சீசனை பெருமையுடன் முடிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.