ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை பிளேஆஃப் சுற்றுக்கு வழிநடத்திய ஒரே கேப்டன் என்ற வரலாற்று சாதனையை பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் படைத்தார். ஐபிஎல் 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் பிளேஆஃப் இடத்தைப் பிடித்த பிறகு அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தியா பாகிஸ்தான் மோதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
24
பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி
இதில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 3 அணிகள் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்றுள்ளன. 4வது இடத்துக்கு டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் போட்டி போடுகின்றன.
இந்நிலையில், ஐபிஎல்லில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
34
பஞ்சாப் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழந்து 219 ரன்கள் குவித்தது. நேகல் வதோரா 70 ரன்களும், ஷாசாங் சிங் 59 ரன்களும் எடுத்தனர். பின்பு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஜெய்ஸ்வால் அதிரடியாக 50 ரன்கள் விளாசியும் பயனில்லை. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருக்கும் நிலையில், மூன்று வெவ்வேறு அணிகளை பிளேஆஃப் சுற்றுக்கு வழிநடத்திய ஒரே கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார். 2020 ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர், மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியடைந்தார்.
கடந்த ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மூன்றாவது கோப்பை வெல்ல உதவினார். இப்போது ஐபிஎல் 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியை பிளேஆஃப் சுற்றுகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.