Shubman Gill Completes 5000 Runs in T20 Cricket : ஐபிஎல் 2025 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள் சாதனை படைத்தார்.
Shubman Gill Completes 5000 Runs in T20 Cricket : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் 3ஆவது அணியாக எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் இருந்தது. அதனை குஜராத் டைட்டன்ஸ் நிறைவு செய்துள்ளது.
27
டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடைபெற்றது. இதில், எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதனால் டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது.
37
குஜராத் டைட்டன்ஸ் 205 ரன்கள்
இதில், தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் கடைசி வரை அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் இருந்து 65 பந்துகளில் 14 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் கொடுக்க டெல்லி கேபிடல்ஸ் 199 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19 ஓவர்களிலேயே தனது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாக சென்றது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் 5000 ரன்கள் சாதனை படைத்தார். அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், சுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
57
6ஆவது வீரராக சாதனை படைத்த கில்
இந்த சாதனையை படைத்த ஆறாவது வீரர் சுப்மன் கில். கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல், ஷான் மார்ஷ், டெவோன் கான்வே மற்றும் பாபர் அசாம் ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இடையேயான 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் குஜராத் அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.
67
குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகளுடன் முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 12 போட்டிகளில் 18 புள்ளிகள் பெற்றுள்ளது. டெல்லி அணி 12 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. போட்டிக்குப் பிறகு பேசிய சுப்மன் கில், "பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
77
பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ்
இன்னும் இரண்டு முக்கியமான போட்டிகள் உள்ளன. அந்த போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல நிலையில் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைவது முக்கியம். கேப்டனாக இருக்கும்போது பேட்ஸ்மேனாக மட்டும் யோசிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்" என்றார்.