ஏற்கெனவே பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), எதிர்கால போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதி இருந்தது.
இந்தியாவை பொறுத்தவரை 2029ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட்டை பாகிஸ்தான் நடத்திய நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்தது. அந்த போட்டிகளை இந்தியா இலங்கை சென்று விளையாடியது.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை
இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் புறக்கணித்து தங்களுக்குரிய போட்டிகளை துபாயில் விளையாடி கோப்பையையும் தட்டித்தூக்கியது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக நடைபெற்ற BCCI உடனான முன் ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தனது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.